UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:43 AM
சென்னை:
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் முதன்மை கல்வி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப, தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும். உயர்கல்வி சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதுபோல், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்.ஆசிரியர்கள், அலுவலர்களின் பணப்பலன் தொடர்பான கோப்புகளை நிலுவையில் வைக்காமல், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகங்களில், மாதந்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.