UPDATED : ஜன 27, 2026 09:50 AM
ADDED : ஜன 27, 2026 09:51 AM
பெ.நா.பாளையம்:
பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், குடியரசு தின விழாவையொட்டி, கல்வி ஆலோசனை முகாம் நடந்தது.
குடியரசு தின விழாவில், தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் ப்ரீதா பிரியதர்ஷினி கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது கப்பல் கட்டும் நிறுவனத்தின் செயல் இயக்குநருமான ரஞ்சித்குமார் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவருக்கும், தங்களுடைய பள்ளி காலத்திலேயே, தான் என்னவாக வர வேண்டும் என்ற கனவு இருக்கும். அதை நனவாக்க அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற்று, அதில் முன்னேற வேண்டும், என்றார்.
கல்வி ஆலோசனை முகாம் நிகழ்ச்சியில், 27 கல்லூரிகள் இடம் பெற்றன. கல்வி இயக்குனர் குணசேகர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, துடியலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

