கிரீன் பாரடைஸ் பள்ளியில் மும்முனைப்போட்டி திருவிழா
கிரீன் பாரடைஸ் பள்ளியில் மும்முனைப்போட்டி திருவிழா
UPDATED : மார் 13, 2026 01:43 PM
ADDED : மார் 13, 2026 01:45 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான தனித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டி நடந்தது.
போட்டியில் கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சிலம்பம், இறகுப்பந்து, பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கி போட்டிகளை துவங்கி வைத்தார். முதன்மை இயக்குனர் வனஜா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர் சந்தியா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.
