தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவகங்கையில் இ.சி.ஜி., டெக்னீசியன் படிப்பு துவக்கப்படுமா…

சிவகங்கையில் இ.சி.ஜி., டெக்னீசியன் படிப்பு துவக்கப்படுமா…

சிவகங்கையில் இ.சி.ஜி., டெக்னீசியன் படிப்பு துவக்கப்படுமா…


UPDATED : ஜூலை 09, 2026 05:29 PM

ADDED : ஜூலை 09, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 05:29 PM ADDED : ஜூலை 09, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தாளுநர் மற்றும் இ.சி.ஜி., டெக்னீசியன் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள் துவக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இக்கல்லுாரியில் ஆண்டுதோறும் 100 மாணவர் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடக்கிறது. மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, விபத்து காய சிகிச்சை பிரிவுகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் 70 பேர் படிக்கின்றனர்.

துணை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டு தோறும் லேப் டெக்னீசியன் 100 இடம், மயக்கவியல் மற்றும் அறுவை அரங்கு டெக்னீசியன் படிப்பிற்கு தலா 20 இடம், ரேடியோலஜி டெக்னீசியனுக்கு 10 இடம், ரேடியோதெரபி படிப்பிற்கு 10 இடம் ஒதுக்கப்படுகின்றன.

இத்துடன் எதிர் வரும் காலங்களில் மருந்தாளுநர் பட்டய படிப்பு மற்றும் இ.சி.ஜி., டெக்னீசியன் படிப்பினை துவக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us