தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவி கற்பகம் பல்கலையில் பட்டமளிப்பு விழா

விவி கற்பகம் பல்கலையில் பட்டமளிப்பு விழா

விவி கற்பகம் பல்கலையில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூலை 13, 2026 05:57 PM

ADDED : ஜூலை 13, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 05:57 PM ADDED : ஜூலை 13, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கற்பகம் நிகர்நிலை பல்கலையின் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறை மாணவர்களுக்கான, 18வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலையின் வேந்தர் ராமசாமி தலைமை வகித்தார்.

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையின் துணைவேந்தர் பஞ்சநதம் பட்டங்களை வழங்கி பேசுகையில், “மாணவர்களின் உயர்கல்வியும், ஆராய்ச்சியும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு பங்களிக்க வேண்டும். தனிமனித தேவைகள் குறைந்து, அடிப்படைத் தேவைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய மாணவர்கள் உறுதியேற்க வேண்டும்,” என்றார்.

விழாவில் 18ஆய்வாளர்களுக்கு பி.எச்.டி., பட்டம், 24 பேருக்கு தங்கப் பதக்கம் உட்பட 2,146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us