தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்கேட்டிங் போட்டி பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்

ஸ்கேட்டிங் போட்டி பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்

ஸ்கேட்டிங் போட்டி பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்


UPDATED : ஜூலை 14, 2026 05:21 PM

ADDED : ஜூலை 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 05:21 PM ADDED : ஜூலை 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பிரன்ட்லைன் பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி பெற்றனர்.

திருப்பூர் சகோதயா சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி திருப்பூர் சி.எஸ். அகாடமி பள்ளியில் நடந்தது. மாவட்ட அளவிலான, 47 பள்ளிகளை சேர்ந்த, 500 பேர் பங்கேற்றனர். இன்லைன், 200 மீ ஸ்கேட்டிங் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளியை சேர்ந்த, 4ம் வகுப்பு மாணவர் பக்ரிதீஷ்வரர், இரண்டாமிடம் பிடித்து வெள்ளி வென்றார். ஸ்குவாட், 200 மீ மற்றும் 300 மீட்டர் பிரிவில், எட்டாம் வகுப்பு மாணவர் சச்சின் மூன்றாமிடம் பிடித்து, வெண்கலம் வென்றார்.

இந்த வெற்றி வாயிலாக பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஜோதி பாஸ்கர் ஆகியோரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமையாசிரியை கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us