தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பழைய கட்டடங்கள் அகற்ற உத்தரவு

பள்ளி பழைய கட்டடங்கள் அகற்ற உத்தரவு

பள்ளி பழைய கட்டடங்கள் அகற்ற உத்தரவு


UPDATED : அக் 29, 2026 01:21 PM

ADDED : அக் 29, 2026 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 01:21 PM ADDED : அக் 29, 2026 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
“வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கட்டடங்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டடங்களின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கூரை வடிகால்கள், குழாய்களைச் சுத்தம் செய்ய வேண்டும். கைப்பிடிச் சுவர்கள், குடிநீர்த் தொட்டிகள், சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, குறைபாடுகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

இடிக்க வேண்டிய பழைய கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் அகற்ற வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள குழிகள், திறந்தவெளிக் கிணறுகள், நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக மூட வேண்டும். சேதமடைந்த பகுதிகளில் மாணவர்கள் நுழையத் தடை விதித்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பில் தலைமை ஆசிரியர்களும் பொறுப்பு ஆசிரியர்களும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மழைக்கால பள்ளி பாதுகாப்பு - ஹெச்.எம்.களுக்கு 'செக் லிஸ்ட்'

மின் இணைப்பு:
வகுப்பறைகளில் திறந்த நிலையில் உள்ள ஒயர்கள், சுவிட்சுகளை உடனே சரி செய்ய வேண்டும்.

முதலுதவி:
ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி பெட்டி, அவசர மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவசர எண்கள்:
தீயணைப்பு, ஆம்புலன்ஸ், மின்வாரியம், வருவாய்த்துறை எண்களை தலைமை ஆசிரியர் அறையில் ஒட்டி வைக்க வேண்டும்.

விடுமுறை தகவல்:
கனமழை எச்சரிக்கை இருந்தால் கலெக்டர் அறிவிப்பை பெற்றோர் வாட்ஸாப் குழுவில் உடனே பகிர வேண்டும்.

ஆவணப் பாதுகாப்பு:

மாணவர் வருகை பதிவேடு, மதிப்பெண் பட்டியல்களை தரைமட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் பாதுகாக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு:

சத்துணவு கூடத்தில் மழைநீர் ஒழுகாமல் இருக்கிறதா என தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us