தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு வீரர், உடற்கல்வி ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் பரிசு

விளையாட்டு வீரர், உடற்கல்வி ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் பரிசு

விளையாட்டு வீரர், உடற்கல்வி ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் பரிசு


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில், தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள், சிறந்த வீரர்களை உருவாக்கிய உடற்கல்வி ஆசிரியருக்கு, தமிழக அரசு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று, சிறந்து விளங்கும், இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் விளையாட்டு வீரர்களுக்கு, முதல்வர் மாநில விளையாட்டு விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, 2012-13ம் ஆண்டு விருதை பெற விரும்புவோர், விருது பெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள், தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில், அதாவது, உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள், மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், தனி நபர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல், "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு, வரும், 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us