தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.,பார்க்குகளில் வாடகை குறைப்பு: தமிழக அரசு முடிவு

ஐ.டி.,பார்க்குகளில் வாடகை குறைப்பு: தமிழக அரசு முடிவு

ஐ.டி.,பார்க்குகளில் வாடகை குறைப்பு: தமிழக அரசு முடிவு


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழகத்தில் காலியாக இருக்கும் ஐ.டி.,பார்க்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக வாடகை குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுதும் 48 சிறப்பு பொருளாதார மையங்கள் உள்ளன. இதில் 17 ஐ.டி.,பார்க்குகள் தமிழக அரசின் "எல்காட்&' சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் ஐ.டி.,பார்க்குகள் அமைந்து 2 ஆண்டுகளாகியும், எந்த நிறுவனமும் இங்கு பணிகளை துவக்கவில்லை. இவற்றை பராமரிக்கவே எல்காட்டிற்கு ரூ.லட்சக்கணக்கில் செலவாகிறது. உள்ளூர் நிறுவனங்களை இந்த ஐ.டி.,பார்க்குகளுக்கு ஈர்க்கும் விதமாக சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து இந்த ஐ.டி.,பார்க்குகளில் வாடகை எவ்வளவு செலுத்த முடியும் என விண்ணப்பிக்கும்படி விளம்பரம் செய்யப்பட்டது. பல நிறுவனங்கள் அளித்த வாடகை கட்டணத்தை எல்காட் பரிசீலித்து அரசின் முடிவுக்கு அனுப்பியது. இந்த ஐ.டி.,பார்க்குகளில் வாடகை சதுரஅடி ரூ.18 லிருந்து 15 ஆக குறைக்க தமிழகஅரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் ரூ.பல கோடி செலவழித்தும் பலனின்றி வீணாகக் கிடக்கும் இந்த ஐ.டி.,பார்க்குகளுக்கு இனி விடிவு கிட்டும். உள்ளூர் பட்டதாரிகளுக்கும் பணிவாய்ப்பு கிட்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us