தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்; தமிழகத்தில் 14,211 பேர் பதிவு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்; தமிழகத்தில் 14,211 பேர் பதிவு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்; தமிழகத்தில் 14,211 பேர் பதிவு


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி, கடனுதவி அளிப்பதற்காக, விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை, செப்., 17ல் பிரதமர் துவக்கி வைத்தார். இத்திட்டமானது, 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13,000 கோடி ரூபாய் செலவில், நாடு முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது.ஐந்து ஆண்டுகள்
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன இத்திட்டமானது, நடப்பாண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.இத்திட்டத்தின் கீழ், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் தச்சர், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெறலாம்.இத்திட்டத்திற்கு, தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, இது சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை அளிப்பதற்காக, தமிழக அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.சரிபார்ப்பு
இந்த சூழ்நிலையில், விஸ்வகர்மா திட்டத்தில் பயன் பெற, தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் 31ம் தேதி வரை, கோவை 5,510; ஈரோடு 1,568; புதுக்கோட்டை 2,287; ராமநாதபுரம் 1,282; நீலகிரி 384; திருப்பூர் 1,286; விருதுநகர் 1,894 பேர் என, மொத்தம் 14,211 பேர் பதிவு செய்துள்ளனர்.மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us