இன்று ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு: 4910 பேர் பங்கேற்பு
இன்று ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு: 4910 பேர் பங்கேற்பு
UPDATED : ஜூலை 04, 2026 11:42 AM
ADDED : ஜூலை 04, 2026 11:44 AM
சிவகங்கை:
மாவட்டத்தில் இன்றும், நாளையும் 18 தேர்வு மையங்களில் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வினை (டெட்) 4910 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரி யருக்கான தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று (ஜூலை 4) நடக்கும் முதல் தாள் தேர்வினை சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி, புனித ஜஸ்டீன் மகளிர் மற்றும் மெட்ரிக் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி ஆகிய 5 தேர்வு மையங்களில் 1556 பேர் எழுத உள்ளனர்.
நாளை இரண்டாம் தாள் தேர்வு நாளை (ஜூலை 5) ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளினை மானாமதுரை அரசு மகளிர், திருப்புவனம் அரசு மகளிர், காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி, திருப்புத்துார் என்.எம்., மகளிர் பள்ளி, தேவகோட்டை புனித மேரீஸ் மகளிர் பள்ளி, திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி, டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி, சூசையப்பர்பட்டிணம் சகாயராணி மகளிர் பள்ளி, சிவகங்கை சாம்பவிகா மேல்நிலை பள்ளி, சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளி, சிவகங்கை புனித ஜோசப், புனித ஜஸ்டீன் மெட்ரிக் பள்ளிகள் என 13 தேர்வு மையங்களில் 3,554 பேர் எழுதுகின்றனர்.
கண்காணிப்பு பணியில் 130 பேர் ஈடுபட உள்ளனர். இணை இயக்குனர் ராமகிருஷ்ணன், முதன்மை கல்வி அலு வலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் தலைமையில் தேர்வு பணிகள் நடைபெற உள்ளது.
மின்னணு பொருட்களுக்கு தடை முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கூறியதாவது:
தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும். தேர்வுக்கான நுழைவு சீட்டு, கருப்பு நிற பந்து முனை பேனா 2, தெளிவான போட்டோ, ஆதார், பான், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றுடன் வரவும்.
தேர்வு அறைக்குள் அலை பேசி, மைக், கால்குலேட்டர், மின்னணு டைரி, லாக் டேபிள், பேஜர், டிஜிடல் கைக்கடிகாரம், புத்தகங்கள் கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
