தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சரியில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு 50 கி.மீ. துார பயணம் தவிர்ப்பு

நர்சரியில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு 50 கி.மீ. துார பயணம் தவிர்ப்பு

நர்சரியில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு 50 கி.மீ. துார பயணம் தவிர்ப்பு


UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM

ADDED : ஜூலை 31, 2023 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM ADDED : ஜூலை 31, 2023 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்:
நாற்றுகள் வாங்குவதற்கு 50 கி.மீ. வரை பயணம் செய்வதை தவிர்த்து விவசாயிகள் சின்னமனூரில் வாங்கிக் கொள்ள ஏதுவாக, நர்சரி ஒன்றை தோட்டக்கலைத்துறை ஆரம்பித்துள்ளது.தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக தரப்படுகிறது. இந்த நாற்றுகளை வாங்க கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, சின்னமனுார், அணைப்பட்டி மற்றும் சின்னமனூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும்.குறைந்தது 50 கி.மீ., துார பயணம் செய்ய வேண்டும், அத்துடன் நாற்றுகளை எடுத்துவர ரூ..3 ஆயிரம் வாடகையில் வாகனங்களுடன் செல்ல வேண்டும். நாற்றுக்கள் எடுத்து வர விவசாயிகள் அவதிப்பட்டனர். இப் பிரச்னைக்கு தீர்வு காண சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக்குடிலில் நர்சரியை தோட்டக்கலைத்துறை துவக்கியது. இதில் தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுகள் வளர்க்கப்படுகிறது. இதன்மூலம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வட்டார விவசாயிகள் காய்கறி நூற்றுகள் வாங்க இனி பெரியகுளம் செல்ல வேண்டாம். சின்னமனுாரில் வாங்கிட ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பயண நேரம், செலவு, வாகன வாடகை மிச்சமாகிறது. தோட்டக்கலைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us