UPDATED : மார் 10, 2013 12:00 AM
ADDED : மார் 10, 2013 08:37 AM
அ நிறம் | அளவு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப, நாளை, சென்னையில் கவுன்சிலிங் துவங்குகிறது.
காலியாக உள்ள அசிஸ்டன்ட் சர்ஜன், சீனியர் அசிஸ்டன்ட் சர்ஜன், சிவில் சர்ஜன், சீனியர் சிவில் சர்ஜன், சீப் சிவில் சர்ஜன் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
சென்னை, மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தில், நடக்கும் கவுன்சிலிங்கில், முதுநிலை படித்த டாக்டர்கள், 950 பேர் பங்கேற்கின்றனர்.
