தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்க திட்டம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்க திட்டம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்க திட்டம்


UPDATED : மார் 10, 2013 12:00 AM

ADDED : மார் 10, 2013 08:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2013 12:00 AM ADDED : மார் 10, 2013 08:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த, 2007-08ம் கல்வி ஆண்டு முதல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், புத்தகம், சீருடை, காலணிகள், பென்சில் உள்ளிட்ட, 27 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், மாணவர்கள் முழு பலன் அடையும் வகையிலும், மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, வங்கி சேவை வழங்க, பிரபல வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மும்பை மாநகராட்சி ஆணையர் சீதாராம் குன்ட் கூறியதாவது:

இந்த டெபிட் கார்டுகளின் மூலம், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்க முடியும்; பணம் எடுக்க முடியாது. எனவே, மாணவர்கள், வேறு காரணங்களுக்காக செலவு செய்ய முடியாது.

பெற்றோரும், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பணத்தை வேறு வழியில் செலவிட முடியாது. இவ்வாறு சீதாராம் குன்ட் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us