UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 09:01 AM
விண்ணப்பத்தினை ஆன்-லைன் வழியே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0422-6611345/6611346 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டு முதல் ஒரே பாடத்திட்டம், ஆசிரியர்களின் தரம், வகுப்பறைகள், ஆய்வுக்கூட வசதிகள் இருக்கும்.
ஆய்வுகளில் வசதிகள் குறைபாடுகள் இருந்த கல்லூரிகளுக்கு அதனை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள காலஅவகாசத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படாத பட்சத்தில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படும் என்று துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.
கலந்தாய்வு விபரம்:
1. இணையதள விண்ணப்பம் துவங்கும் தேதி மே - 6
2. பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூன் - 7
3. தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி ஜூன் -17
4. முதல்கட்ட கலந்தாய்வு (சிறப்பு ஒதுக்கீடு) தேதி ஜூலை 1 முதல் 8 வரை
5. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி ஜூலை 15 மற்றும் 16
6. கல்லூரி துவக்கம் தேதி ஜூலை -25
