தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்

விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்

விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மதில் சுவரை ஒட்டி, நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை பழைய போலீஸ் நிலையம் எதிரே உள்ளது எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. நுாற்றாண்டு கடந்த இந்த பள்ளியில் தற்போது, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளி எதிரே போலீஸ் நிலையம் இருந்தபோது, கைப்பற்றப்பட்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டது.

தற்போது அதில் இருந்த முக்கிய பொருட்கள் திருடு போயுள்ளன. இந்நிலையில், வெயில், மழையில் நனைந்து, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறியுள்ளது. அடிக்கடி இதில் இருந்து விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, பெற்றோர் தங்களது பிள்ளைகளை உடன் அழைத்து வந்து, பின்னர் அழைத்து செல்கின்றனர். எனவே, மாணவ, மாணவியர் அச்சம் இன்றி வகுப்பறையில் பாடம் பயிலும் வகையில், பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ள லாரியை உடனடியாக அகற்ற வேண்டும் என, மாணவ, மாணவியர், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us