தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி

மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி

மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி


UPDATED : ஜன 29, 2015 12:00 AM

ADDED : ஜன 29, 2015 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2015 12:00 AM ADDED : ஜன 29, 2015 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகமலைபுதுக்கோட்டை: மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக மகாத்மா காந்தி வேடமணிந்து தொடர்ந்து 35 மணி நேரம் அசையாமல் நின்று ஆந்திராவைச் சேர்ந்த அக்சிந்தலா சேசுபாபு சாதித்துள்ளார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அக்சிந்தலா சேசுபாபு என்பவர் மகாத்மா காந்தி வேடம் அணிந்து தொடர்ந்து பல மணி நேரம் நின்று கின்னஸ் சாதனை புரியும் முயற்சியில் ஈடுபட்டார். ஜன., 26 காலை 10.30 மணி முதல் மறுநாள் இரவு 11.11 வரை தொடர்ந்து 35 மணி 30 நிமிடங்கள் அசையாமல் நின்றார்.

இவரது சாதனை இடைவிடாமல் பதிவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று நடந்த பாராட்டு விழாவில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல்வர் அழகர்நாதன் வரவேற்றார். கல்லூரி துணைத்தலைவர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமை வகித்தார். சாதனை நிகழ்வு அறிக்கையை என்.சி.சி., அலுவலர் குமார் வாசித்தார். சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வாழ்த்தி பேசினார்.

சாதனையாளர் அக்சிந்தலா சேசுபாபு பேசுகையில், ”இதற்கு முன் எனது சாதனை முயற்சிகள் டில்லி, ஆந்திராவில் நடந்த போது அரசியல்வாதிகள் மட்டுமே பார்த்துச்சென்றனர். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த சாதனை முயற்சியை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்துச் சென்றுள்ளனர். இதன்மூலம் காந்தியின் கொள்கைகளை பரப்பும் எனது நோக்கம் நிறைவேறியுள்ளது,” என்றார்.

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கல்லூரி பொருளாளர் சேர்மபாண்டியன், மதுரை காமராஜ் பல்கலை கணிதவியல் துறை தலைவர் லெல்லீஸ் திவாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரேமலதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us