தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு துவங்கியது.

விழுப்புரம் அடுத்த காகுப்பத்தில் உள்ள, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில், இயந்திரவியல் துறை சார்பில், சர்வதேச அளவிலான, இரண்டு நாள், கருத்தரங்கம் நேற்று துவங்கியது. கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மைய ஆலோசகர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி ஞானகாந்தி, அண்ணா பல்கலைக்கழக மல்டிமீடியா ஆய்வு மையத்தின் கல்வியியல் இயக்குனர் கவுரி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், 350 ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்திருந்தனர். ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரைகளின்படி, 244 ஆய்வுக் கட்டுரைகள் ஏற்று கொள்ளப்பட்டது. இயந்திரவியல் துறை தலைவர் ஞானமூர்த்தி, விரிவுரையாளர்கள் நெடுஞ்செழியன், வேல்முருகன், பிரகாஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us