தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேஸ்புக் பரீதம்; மாணவி தற்கொலை

பேஸ்புக் பரீதம்; மாணவி தற்கொலை

பேஸ்புக் பரீதம்; மாணவி தற்கொலை


UPDATED : அக் 30, 2015 12:00 AM

ADDED : அக் 30, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2015 12:00 AM ADDED : அக் 30, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மஹாராஷ்டிரா
:
 மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி, சமூக வலைதளமான, பேஸ்புக்கில், தன்னை பற்றிய ஆபாச படங்களை, சக மாணவன் வெளியிட்டதால் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மாணவி, 10ம் வகுப்பு படித்து வந்தார். சக மாணவன் ஒருவன், மாணவியை பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அந்த மாணவனை எச்சரித்து விடுவித்தனர். ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், மாணவியை ஆபாசமாக சித்தரித்து, பேஸ்புக்கில் படங்களை வெளியிட்டான். அதிர்ச்சி அடைந்த மாணவி, தன் வீட்டு மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us