தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்

மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்

மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்


UPDATED : டிச 30, 2015 12:00 AM

ADDED : டிச 30, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2015 12:00 AM ADDED : டிச 30, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், மாணவ, மாணவியருக்கு வரவேண்டும்; படிப்பை நேசிக்க வேண்டும்என, தமிழக ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசினார்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை மற்றும் ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய வெற்றி உறுதி என்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பெருமாநல்லூர் எம்.எல்.ஆர்., திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. 

தமிழக ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:

மாணவர்கள், படிப்பில் ஆர்வம் காட்டினால், அவர்கள் நினைத்தபடி, கலெக்டர், வக்கீல், டாக்டர், போலீஸ் அதிகாரி என, எது வேண்டுமானாலும் ஆகலாம். மாணவர்களே, புத்தகத்தை ஆராய்ச்சி செய்து படியுங்கள். பிளஸ் 2 தேர்வு கடினமானதல்ல. நூறு நாட்களில், உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும். புரிந்து படிக்க வேண்டும். மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தால், நீங்களே கதாநாயகன். தேர்வைக்கண்டு பயப்படவோ, வருந்தவோ கூடாது. தீபாவளி பண்டிகை போல், மகிழ்ச்சியாக நினைத்து, நன்றாக படிக்க வேண்டும். உச்சாகமாகவும், சந்தோஷமாக, ஆராய்ச்சி செய்து படித்தால், நீங்களே வெற்றித்திருமகன்.

சாதிக்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், மாணவனுக்கு வர வேண்டும்; சோர்வு இருக்கக்கூடாது. அப்போது மட்டுமே முன்னேற முடியும். என்ன படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என, திட்டமிடல் வேண்டும். சினிமா, கிரிக்கெட்டை போல், படிப்பையும் நேசிக்க வேண்டும். பாட்டு, ஒவியம், விளையாட்டு போலவே, படிப்பும் ஒரு கலை. ஆர்வத்துடன் படித்தால், வெற்றி உறுதி. இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்.

நிகழ்ச்சியில், மாணவர்களிடம் கேள்வி கேட்டு, பதில் அளித்தவர்களுக்கு புத்தகத்தை, அவர் பரிசாக வழங்கினார். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலவலர் முருகன், தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி விஜயலட்சுமி, ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, முதல்வர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us