UPDATED : டிச 30, 2015 12:00 AM
ADDED : டிச 30, 2015 11:04 AM
சென்னை
: சென்னையைச்
சேர்ந்த அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டன. பள்ளி, கல்லுாரிகளின் கட்டடங்களை வெள்ளம்
சூழ்ந்தது.
கட்டடங்கள் வலுவிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடங்களை நேரில் ஆய்வு செய்யாமல் பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளின் கட்டடங்கள் மாணவர்கள் வந்து படிக்கும் அளவுக்கு ஏற்றதாக இல்லை. பள்ளி கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும்படி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை.
மனுவை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
