தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கன்வாடிகளில் காய்கறி இல்லாத சாம்பார்

அங்கன்வாடிகளில் காய்கறி இல்லாத சாம்பார்

அங்கன்வாடிகளில் காய்கறி இல்லாத சாம்பார்


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
காய்கறிகளின் விலை அதிகரிப்பதால், அங்கன்வாடி மையங்களில், காய்கறி இல்லாத சாம்பார் தயாரிக்கின்றனர். இதனால் சிறார்களுக்கு, ஊட்டச்சத்தான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை சரிவர பெய்யவில்லை. தண்ணீர் இன்றி காய்கறி விளைச்சல் பாழாகி, வரத்து குறைந்துள்ளது. எனவே, விலை அதிகரித்துள்ளது. தக்காளி, பீன்ஸ் 100 ரூபாயை தாண்டியுள்ளது. கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் என மற்ற காய்கறிகளின் விலையும் கூட 70 முதல் 80 ரூபாய் என அதிகரித்துள்ளது. கீரைகளின் விலையும் தாறுமாறாக உள்ளது. விலை உயர்வால், அங்கன்வாடி மையங்களில் காய்கறிகள் இல்லாத சாம்பார் தயாரிக்கின்றனர். குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய, ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது.கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, அங்கன்வாடி மையங்களின் மூலமாக, ஊட்டச்சத்தான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. காய்கறிகள் விலை உயர்வால், இவர்களும் ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சில அங்கன்வாடிகளின் ஊழியர்கள், குறைந்த விலைக்கு கிடைக்கும் காய்கறிகளை தேடிப்பிடித்து வாங்கி, பயன்படுத்துகின்றனர். தேவையான காய்கறிகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட சாம்பார் சுவையாக இருப்பதில்லை. இதனால், சிறார்கள் சரியாக சாப்பிடுவதில்லை. காய்கறிகள் இல்லாத சாம்பார் வழங்குவதால், கர்ப்பிணியரும், குழந்தை பெற்ற தாய்மார்களும், அங்கன்வாடி ஊழியர்களை கடிந்து கொள்கின்றனர்.அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க செயலர் ஜெயம்மா கூறியதாவது:
சிறார்கள், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்தான உணவு அவசியம். உணவில் காய்கறிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடிகளில் உணவு தயாரிக்க வழங்கப்படும் நிதியை, அதிகரிக்க வேண்டும். காய்கறிகளின் விலை அதிகரித்ததால் அங்கன்வாடி ஊழியர்களால் வாங்க முடிவதில்லை. மற்ற உணவு தானியங்களுக்கான தொகை குறைந்தாலும், காய்கறிகளின் விலைக்கு தகுந்தபடி, நிதி வழங்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us