தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு சங்கங்கள் வசூல் வேட்டை

விளையாட்டு சங்கங்கள் வசூல் வேட்டை

விளையாட்டு சங்கங்கள் வசூல் வேட்டை


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சான்றிதழ் மதிப்பில்லாத விளையாட்டு சங்கங்களில் பணம் கட்டி, போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் விளையாட்டு ஆர்வம் உள்ள மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். தேசிய அளவில், எஸ்.ஜி.எப்.ஐ., என்ற இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, சாய் எனப்படும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்டவற்றின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் வழியே, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற இந்த அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் வழங்கும் சான்றிதழ்களுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.இந்நிலையில், மாணவர்களின் ஆர்வத்தை வணிக நோக்கில் பயன்படுத்தும் வகையில், சில அதிகாரப்பூர்வமற்ற சங்கங்கள், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பில், மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற விளையாட்டு அமைப்புகள் போல், பெயரளவில் சிறிய மாற்றம் உள்ள, 19 அமைப்புகள் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் ஏமாற வேண்டாம்.அந்த அமைப்புகள் தரும் சான்றிதழ்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவாது என, அறிவுறுத்தியுள்ளனர். அந்த அமைப்புகளின் பட்டியலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சங்கங்கள் எவை?1. இந்திய பெண்கள் ஒலிம்பிக் சங்கம்2. ஊரக ஒலிம்பிக் அசோசியேஷன் இந்தியா3. இந்திய ஊரக ஒலிம்பிக் அசோசியேஷன்4. மாணவர் ஒலிம்பிக் அசோசியேஷன்5. இந்திய பள்ளி ஒலிம்பிக் அசோசியேஷன்.6. ஊரக கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா7. ஊரக கேம்ஸ் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா8. ஊரக அசோசியேஷன் ஆப் இந்தியா9. தேசிய பள்ளி விளையாட்டு பெடரேஷன் ஆப் இந்தியா10. பள்ளி விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகள் கூட்டமைப்பு11. தேசிய ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா12. யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா13. யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா14. இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை15. பாரம்பரிய இளைஞர் விளையாட்டுக்கான சங்கம்.16. மாணவர் விளையாட்டு மேம்பாட்டு இந்திய சங்கம்17. மாணவர் விளையாட்டு மேம்பாட்டு இந்திய கூட்டமைப்பு18. மாணவர் விளையாட்டு நடவடிக்கை கூட்டமைப்பு19. மாணவர் விளையாட்டு இந்திய கூட்டமைப்புஆகியவை சான்றிதழ் மதிப்பில்லாத சங்கங்களுக்கான மத்திய இளைஞர் விளையாட்டு துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us