UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:09 AM
கோவை:
கொடிசியா வணிக வளாகத்தில் நடந்து வரும், புத்தக கண்காட்சியில், நேற்று நாடக இயக்குனர் சில்வர் கிரவுன் ஜெகன் இயக்கி நடித்த, கொரோனா குடும்பம் என்ற நகைச்சுவை விழிப்புணர்வு நாடகம் நடந்தது.கணேஷ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகனும், துணை கதா பாத்திரங்களில் சீனிவாசன், சிவகணேஷ், சீத்தாராம், கோவை சாந்தி, பூங்குயில் பாபு ஆகியோர் நடித்தனர். கொரோனா தொற்றுக்காலத்து தனிமையை மையமாக வைத்து, பூங்குயில் சீனிவாசன் இந்த கதையை எழுதி உள்ளார். ஒரு சீரியசான கதையை மிகவும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் நடித்து அசத்தி, பார்வையாளர்களின் கைதட்டல்களை பெற்றனர்.நாடகம் குறித்து இயக்குனர் சில்வர் கிரவுன் ஜெகன் கூறுகையில், கொரோனா என்ற தொற்று நோய், மக்களை அதிகம் அச்சப்படுத்தி விட்டது. அந்த சூழ்நிலையில் ரத்த பரிசோதனையின் போது, பெயர் ஒற்றுமையால், கொரோனா தொற்று இல்லாத ஒருவருக்கு, தொற்று இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி விடுகின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் ஏற்படும் குழப்பம்தான் இந்த நாடகம், என்றார்.
