UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 04:35 PM
சிவகங்கை:
மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல், பள்ளியில் சேர்த்தல் தொடர்பான வட்டார குழுக்கூட்டம் சிவகங்கையில் நடந்தது.வட்டார வள மையத்தை உள்ளடக்கிய கல்வியின் வட்டாரக்குழு கூட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பாலாமணி, இந்திராணி, வளர்மதிஞானகிரேஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபராணி பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல், அவர்களை பள்ளியில் சேர்த்தல், விளையாட்டில் ஆர்வமுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கான பயிற்சி வழங்கி போட்டிகளில் பங்கேற்க வைத்தல், மருத்துவ மதிப்பீடு முகாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.
