தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூல்!

மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூல்!

மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூல்!


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 04:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
அரசு பள்ளிகளுக்கு மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பிரின்டர், பேப்பர் வழங்கப்பட்டும் இந்தாண்டு வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் பருவ, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள் வழங்க வகுப்புகளுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ. 120 வரை ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் மட்டும் ஒரு மாவட்டத்திற்கு ரூ. ஒரு கோடிக்கு மேல் வசூல் ஆகும். இதன் மூலம் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அச்சகங்களுக்கு வினாத்தாள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்து பல லட்சங்களில் கமிஷன் பார்த்தனர்.இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் பிரின்டர்கள் வழங்கப்பட்டன. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏ4 அளவு பேப்பர் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பொதுவான வினாத்தாள் என்பதால் அந்தந்த பள்ளி இமெயிலுக்கு வினாத்தாள்களை பி.டி.எப்., ஆக அனுப்பி, அதை பள்ளிகளில் பிரின்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. சில மாவட்டங்களில் இம்முறை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இந்தாண்டும் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக சர்ச்சையாகி உள்ளது.இதுகுறித்து மதுரை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் மே மாதமே பிரின்டர், பேப்பர் தயார் நிலையில் இருந்தது. 300 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு அதற்கேற்ப திறன் கொண்ட பிரின்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தாண்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வினாத்தாள் கட்டணமாக ஆறு - எட்டாம் வகுப்புக்கு ரூ.60, ஒன்பது, 10ம் வகுப்புக்கு ரூ.80, பிளஸ் 1, பிளஸ் 2க்கு ரூ.100 என வசூலிக்கப்படுகிறது. ஆனால் கல்வி அதிகாரிகள் அதற்கான உரிய சுற்றறிக்கை, செயல்முறை எதுவும் பிறப்பிக்கவில்லை. கட்டணம் வசூலிப்பில் வெளிப்படை தன்மை வேண்டும். அதேநேரம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பிரின்டர், பேப்பர் நிலை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us