UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 05:44 PM
அ நிறம் | அளவு
மதுரை:
பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரி சார்பாக அரசனுார் கிராம மக்களுக்கு பிழையின்றி எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு உன்னத் பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மூத்த குடிமக்களுக்கு பிழையின்றி எழுத மாணவிகள் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் ஊராட்சி தலைவர் செல்வராணி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் கனிமொழி, நாட்டு நலப்பணி திட்ட உறுப்பினர் கார்த்திகா பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.
