UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 09:17 AM
அவிநாசி:
அவிநாசியில், தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா நடந்தது. வட்டார தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.மகளிர் அணி செயலாளர் சுசீலா உறுதிமொழி ஏற்பு உரை நிகழ்த்தினார். அகில இந்திய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசினார்.எமிஸ் திட்டத்தை முழுமையாக விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைதல், காலை சிற்றுண்டி திட்டம் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து மாணவர்களுக்கு முழுமையான கல்வி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் நம்பிராஜ், பொருளாளர் சந்திரசேகர், செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், துணைத்தலைவர் கனகராஜ், மகளிர் அணி செயலாளர் ராமராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற சுதந்திரநல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், பனப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செல்வம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். வட்டார பொருளாளர் மல்லைய ராஜா நன்றி கூறினார்.
