தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உத்தரகண்டில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

உத்தரகண்டில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

உத்தரகண்டில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 05:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 05:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உத்தரகண்ட் மாநிலத்தில், விரைவில் உத்தரகண்ட் - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.உத்தரகண்ட் சார்பில், டிச., 8, 9ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநில சுற்றுலா துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சவுரப் பகுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது:
தொழில் முதலீட்டை ஈர்க்க, உத்தரகண்ட் டேராடூனில், டிச., 8, 9ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி, இந்த பத்தாண்டு உத்தரகண்டிற்கானது என்று தெரிவித்துள்ளார். அதை, உண்மையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். முதலீட்டாளர்களின் முகவரியாக உத்தரகண்ட் திகழ்கிறது.அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், விமானம், ரயில், சாலை என எளிதில் அணுகும் வகையில் இணைப்பு வசதிகள் உள்ளன. மாநிலத்தில், 70 சதவீதம் வனப்பகுதி உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில், மருத்துவம், சுற்றுலா, கல்வி என, பல துறைகளில் தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் வழங்க, 30 கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.தொழில் நிறுவனங்களுக்கு, 6,000 ஹெக்டேர் நில வங்கி தயாராக உள்ளது. மின் கட்டணம் மிகவும் குறைவு. ஆண்டு முழுதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும். காசி - தமிழ் சங்கமம் போல், உத்தரகண்டில், உத்தரகாண்ட் - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.உத்தரகண்ட் முதல்வரின் செயலர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், தமிழகம், உத்தரகண்ட் இடையே, கலாசார தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கண நுாலை எழுதிய அகத்தியரின் ஆசிரமம் உத்தரகண்டில் உள்ளது. வட மாநிலங்களில், உத்தரகண்டில் மட்டும் தான் முருகன் கோவில் உள்ளது. தேசிய வளர்ச்சி விகிதத்தை விட, உத்தரகாண்டின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us