UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 04:57 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மாவட்டத்தில் தனியார் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் சகி எனும் அமைப்பு செயல்படுகிறது. இதில் 226 பேர் தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு தன்னார்வலர்களாக உள்ளனர்.6 - 12ம் வகுப்பு வரை தாய், தந்தையரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்குகிறது. கள்ளிக்குடி தாலுகாவில் கே.வெள்ளாகுளம் அரசு பள்ளி, எஸ்.பி.நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் தகுதியான 25 மாணவர்களுடன் தன்னார்வலர் மங்கையர்க்கரசி கலெக்டர் அலுவலகம் வந்தார். மாணவர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் மனுக்கள் வழங்கினர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
