UPDATED : நவ 23, 2023 12:00 AM
ADDED : நவ 23, 2023 09:35 AM
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த விவேக்குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.சுதீர்குமார் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இருவரும் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.உத்தர பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில், 1968 மார்ச்சில் விவேக்குமார் சிங் பிறந்தார். 2017 செப்டம்பரில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், 1969 டிசம்பரில் எம்.சுதீர்குமார் பிறந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
