தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு நாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்

ஒரு நாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்

ஒரு நாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 09:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் உலக குழந்தைகள் தினத்தையொட்டி, 10ம் வகுப்பு மாணவன் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். மகிழ்ச்சியான கற்றலுக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில், சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், சமீபத்தில் மாணவர்கள் பொறுப்பேற்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஜோத்பூர் பார்க் ஆண்கள் பள்ளியைச் சேர்ந்த சைகத் டே எனும் 10ம் வகுப்பு மாணவன், ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.அதன் பின், அவர் மாணவர்களிடம் பேசியதாவது:
இந்த பள்ளியின் அடையாள தலைமை ஆசிரியராக, மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவியல், நவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் நடத்தினால் மாணவர்கள் சிறப்பாக புரிந்துகொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.இதே போல் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஆஷா பவன் பள்ளியைச் சேர்ந்த மாலா சிங் முரா என்ற அறிவுசார் குறைபாடு உள்ள மாணவி, ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us