தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைப்பயிற்சி அளிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்

கலைப்பயிற்சி அளிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்

கலைப்பயிற்சி அளிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்


UPDATED : டிச 10, 2023 12:00 AM

ADDED : டிச 11, 2023 09:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2023 12:00 AM ADDED : டிச 11, 2023 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இளைஞர்களுக்கு கலைப் பயிற்சி அளிக்க, 100 நாட்டுப்புற கலைஞர்களை நியமிக்க, கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.கலை பண்பாட்டு துறை சார்பில், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசை கல்லுாரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியிலும், இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதேபோல, மாவட்ட அரசு இசை பள்ளிகள் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் என, 25 இடங்களில், இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புற கலைகள் குறித்து, வாரத்தில் இரண்டு நாட்கள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஓராண்டுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில், சேர விரும்புவோர், இந்த மாதத்துக்குள் விண்ணப்பிக்கலாம்; அடுத்த மாதம் பயிற்சி துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த, அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் அமர்த்த, கலை பண்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 100 கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us