UPDATED : மார் 31, 2024 12:00 AM
ADDED : மார் 31, 2024 09:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் அக தர உறுதிப்பிரிவு சார்பில் 4 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.
நிறைவு விழாவிற்கு முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ், ஆசிரியர் குருணேஸ்வரர் உள்ளிட்டபயிற்சியில் பங்கேற்றவர்களுக்குசான்றிதழ் வழங்கினார்.
கல்லுாரியின் அக தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன் எழுதிய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கு தயாராவது எப்படி என்ற நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.