UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 10:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், 222 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நியமிக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இதை மத்திய அரசு ஏற்காததால், தற்காலிக ஆசிரியர்களை, 15,000 ரூபாய் மாத சம்பளத்தில் ஆறு மாதங்களுக்கு நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.