தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்கள் போதை விழிப்புணர்வு

கல்லுாரி மாணவர்கள் போதை விழிப்புணர்வு

கல்லுாரி மாணவர்கள் போதை விழிப்புணர்வு


UPDATED : பிப் 06, 2026 01:38 PM

ADDED : பிப் 06, 2026 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 01:38 PM ADDED : பிப் 06, 2026 01:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், கல்லுாரி மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, நாடகம் நடத்தப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், இஸ்லாம்நகர், சீனிவாசபுரம் மற்றும் பெருங்களத்துார் ஆகிய கிராமங்களில், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலகு, திருத்தணி ஜி.ஆர்.டி., நர்சிங் மற்றும் கல்வியியல் கல்லுாரி ஆகியவற்றின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஜி.ஆர்.டி., மருந்தியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகாவித்யாசாகர் வரவேற்றார்.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் தென்பாண்டியன், திருத்தணி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் பங்கேற்று போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, நாடகம் ஆகியவற்றை துவக்கி வைத்தனர்.

பேரணியில், 400க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் போதை பொருள் தடுப்பு குறித்தான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us