UPDATED : ஏப் 16, 2026 06:59 PM
ADDED : ஏப் 16, 2026 07:01 PM

அ நிறம் | அளவு
கெலமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனைக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 63ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசலு மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
