UPDATED : ஏப் 25, 2026 01:03 PM
ADDED : ஏப் 25, 2026 01:08 PM

கோவை:
பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் இலவச விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஆரம்பப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயில வசதி உள்ளது.
இந்த பள்ளிகளுடன் இணைந்த இலவச விடுதியில் சேர, தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள பெற்றோர் மற்றும் காப்பாளரின் குழந்தைகள் தகுதியானவர்கள்.
மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். ஏழை பெண் குழந்தைகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை 'செயலாளர், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள், சிவில் ஏரோட்ரோம் போஸ்ட், கோவை - 641014' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

