தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி கலெக்டர் ஆய்வு

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி கலெக்டர் ஆய்வு

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி கலெக்டர் ஆய்வு


UPDATED : நவ 21, 2026 04:33 AM

ADDED : நவ 21, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:33 AM ADDED : நவ 21, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்; பாடவாரியாக மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ந்து கண்காணித்து, கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்;

பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறக்கூடிய நிலையில் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, சி.இ.ஓ., பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், அருள், ரகு, செந்தில்குமார், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் பெருமாள், ஜனசக்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us