தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கத்தில் கே. பி. ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநர் நடராஜன் விழாவிற்கு தலைமை வகித்து பட்டமளிப்பு நிகழ்வை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராமசாமி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக தரவரிசையில் இடம் பெற்றிருப்பது குறித்தும்,  தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இடம் பிடித்திருப்பது குறித்தும் பேசினார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வேல்ராஜ் மற்றும் இஸ்ரோ, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.வீரமுத்துவேல் பேசுகையில், ஒரு செயலை தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே அதில் வெற்றிக்கான முடியும். ஆகையால், முடியாது என்று எந்த செயலையும் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அனுபவத்தில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறவு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆகையால், மாணவர்கள் தொழில்நுட்ப துறையில் அதீத முனைப்புடன் அவரவர் திறன்களை வெளிக்கொண்டு வரவேண்டும். மொபைல் போன்களுக்கு அடிமையாகாமல் தொழில்நுட்ப துறையில் சிறந்த தொழில்முனைவோராக வேண்டும், என்று பேசினார்.கே.பி.ஆர் நிறுவனங்கள் அளவில் முதலிடம் பிடித்த சீனிவாசன் என்ற மாணவனுக்கு சிறப்பு பதக்கம், பரிசு வழங்கப்பட்டது. மேலும், இளநிலை பிரிவில் 8 மாணவர்கள், முதுகலை பிரிவில் 4 மாணவர்களுக்கு சிறப்பு பரிசு பதக்கங்கள் வழங்கப்பட்டன. 2018 -2022 ஆம் கல்வியாண்டில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 631 மாணவர்களுக்கும், 47 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us