தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் அட்மிட்

காலை உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் அட்மிட்

காலை உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் அட்மிட்


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே:
அரசு உறைவிடப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தாவணகெரே சென்னகிரியின் காக்கனுார் கிராமத்தில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 15க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள், அருகில் இருந்தவர்கள் மாணவர்களை சந்தேபென்னுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், தீவிர சிகிச்சைக்காக தாவணகெரேயில் உள்ள சிகடேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜு, மாணவர்களிடம் நலம் விசாரித்த பின், டாக்டர்களிடம் தகவல் கேட்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us