தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் ஆக.12ல் துவக்கம்

டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் ஆக.12ல் துவக்கம்

டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் ஆக.12ல் துவக்கம்


UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM

ADDED : ஜூன் 20, 2023 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM ADDED : ஜூன் 20, 2023 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் (தட்டச்சு), சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே அதிகமானோர் டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் இத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.சுருக்கெழுத்து உயர் வேக தேர்வு ஆக., 12,13ம், இளநிலை, முதுநிலை தேர்வு ஆக.,19, 20ம், வணிகவியல் அக்கவுண்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வு ஆக., 21ம், டைப்ரைட்டிங் இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் ஆக., 26, 27,28ம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை www.tndtegteonline.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் அக்., 27ல் வெளியாகும் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us