தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு துவக்கம்

தமிழ்நாடு மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு துவக்கம்

தமிழ்நாடு மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு துவக்கம்


UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM

ADDED : ஜூன் 20, 2023 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM ADDED : ஜூன் 20, 2023 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்வி கொள்கை 2020 - 21ம் ஆண்டில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நேரடியாக புதிய கல்விக் கொள்கை அமலாகாவிட்டாலும் அதன் முக்கிய அம்சங்கள் பல்வேறு திட்டங்களின் வழியே பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில் புதிய கல்வி ஆண்டில் நாடு முழுதும் 105 பல்கலைகளில் புதிய கல்விக் கொள்கையின்படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை உள்பட 19 மத்திய பல்கலைகள் இடம் பெற்றுள்ளன.தமிழ்நாடு மத்திய பல்கலையில் பி.எஸ்சி., எம்.ஏ., உள்ளிட்ட படிப்புகள் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு படிப்பாக துவங்கப்பட்டுள்ளன. மேலும் 40 நிகர்நிலை பல்கலைகள், 18 தனியார் பல்கலைகளிலும், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் துவங்கப்பட்டுள்ளதாக, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மற்ற பல்கலைகளும் நான்கு ஆண்டு படிப்பு துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us