UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 12:29 PM
அ நிறம் | அளவு
இதுகுறித்து கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் வெளியிட்ட அறிக்கை:
கிரெடாய் சென்னை பிரிவு, இந்திய கான்கிரீட் இன்ஸ்டிடியூட் சென்னை மையம் ஆகியவை இணைந்து, பொறியியல் மாணவர்களுக்கு வீடு கட்டுவது குறித்த பயிற்சியை அளிக்க உள்ளது. அரசு, தனியார் என 10 கல்லுாரிகளில் இருந்து 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வீடு கட்டுவது குறித்து, ஒரு மாத கள நிலை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும். இதில் முதல் பிரிவு பயிற்சி துவங்கி உள்ளது. படிப்பு முடிக்கும் நிலையில் இவர்கள் கட்டுமான பொறியாளர்களாக குடியிருப்புகள் கட்டும் தொழில் முனைவோராக செயல்பட இப்பயிற்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
