தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்த மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி

சித்த மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி

சித்த மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM

ADDED : ஜூன் 20, 2023 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM ADDED : ஜூன் 20, 2023 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழின் முதல் இலக்கண நுாலை எழுதிய தொல்காப்பியரின் ஆசிரியராக விளங்கியவர் அகத்தியர். அவர் தான் சித்த மருத்துவத்தின் தலைவராக போற்றப்படுகிறார். சங்க இலக்கியங்களில் வரும் பல புலவர்கள் மூலிகைகளின் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழில் சிறப்பு மிக்க மருத்துவமாக இருந்த சித்த மருத்துவம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் பரவியது.இந்த மருத்துவத்தில் மட்டும் தான் ரசவாதம், பற்பம், பாஷாணம், செந்துாரம் உள்ளிட்ட மருந்தியல் முறைகள் உள்ளன. இவற்றின் சிறப்புகளையும், சித்த மருத்துவ முறைகளையும் பாடல்களின் வாயிலாகவே சித்தர்களும், நுாலாசிரியர்களும் பதிவு செய்துள்ளனர்.அவற்றை, சித்த மருத்துவ துறை அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து, தற்கால மாணவர்கள் அறியும் வகையில், பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், சித்த மருத்துவ முதுகலை மாணவர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் பங்கேற்கலாம். இந்த பயிற்சியில் 30 பேர் சேர்க்கப்படுவர். விருப்பமுள்ளோர், www.cict.in என்ற இணையதளத்தில் உள்ள சித்த மருத்துவ பயிலரங்கிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, workshope@cict.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, ஜூலை 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us