தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜி - 20 கூட்டம்: ட்ரோன்களுக்கு தடை

ஜி - 20 கூட்டம்: ட்ரோன்களுக்கு தடை

ஜி - 20 கூட்டம்: ட்ரோன்களுக்கு தடை


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
ஜி - 20ன் நான்காவது டிஜிட்டல் பொருளாதார குழு கூட்டத்தை ஒட்டி, ஹோட்டலை சுற்றி ஆறு நாட்களுக்கு ட்ரோன், ஆளில்லா விமானம் உட்பட அனைத்து விதமான சிறிய ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நாளை 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, ஜி - 20ன் நான்காவது டிஜிட்டல் பொருளாதார குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட வி.வி.ஐ.பி.,க்கள் பங்கேற்கின்றனர். சில நாடுகளின் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, கூட்டம் நடக்க உள்ள ஹோட்டலை சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், ஹோட்டலை சுற்றி ஒரு கி.மீ., சுற்றளவுக்கு, இன்று காலை 9:00 மணி முதல் 20ம் தேதி மதியம் 2:00 மணி வரை தற்காலிகமாக விமானங்கள் பறக்க தடை விதித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில், ட்ரோன், ஆளில்லா விமானம் உட்பட அனைத்து விதமான சிறிய ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல் பகுதிகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us