sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்தாண்டு இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறையும்!

/

இந்தாண்டு இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறையும்!

இந்தாண்டு இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறையும்!

இந்தாண்டு இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறையும்!


UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM

ADDED : ஜூலை 18, 2024 11:13 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM ADDED : ஜூலை 18, 2024 11:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு மாணவரும், அவர்கள் படிக்கும் துறைக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, 14 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியை ஆரம்பித்தோம். இன்று, அந்த நோக்கம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ரோபாட்டிக்ஸ், அட்டோமேஷன், எனர்ஜி உட்பட 33 சென்டர் ஆப் எக்ஸெலன்ஸ் நிறுவப்பட்டுள்ளது.
அபரிமிதமான வாய்ப்புகள்

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற கோர் இன்ஜினியரிங் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் குறிப்பாக மாணவிகளுக்கு உள்ளது. ஆனால், இத்தகைய துறைகள் 'பெண்களுக்கு சவாலாக இருக்கும்' என்ற தவறான கண்ணோட்டத்தில் பெரும்பாலான மாணவிகள் உள்ளனர். இத்தகைய துறைகளிலும் ஐ.டி., நிறுவனங்களை போன்று அலுவலகத்தில் அமர்ந்து கடினமின்றி வேலை செய்யும் பணிகள் அதிகம் உள்ளன என்பதை இன்றைய மாணவிகளும், பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்கள் பெண் இன்ஜினியர்களுக்கு வளமான வாய்ப்புகளையும், பிரத்யேக வசதிகளையும் வழங்குகின்றன.
அனைத்து துறைகளிலும் அதிக தாக்கத்தை ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஏற்படுத்தி வருகிறது. தற்போது, 'ஓப்பன் ஏ.ஐ.,' விட 'ஜெனரேட்டிவ் ஏ.ஐ.,' முக்கியத்துவம் பெற்றுள்ளதால், துறை சார்ந்த திறன்களுடன் இத்திறனையும் வளர்த்துக்கொள்வது அவசியம். நமது நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும். நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருவதால், கழிவுகளின்றி மறுசுழற்சி சார்ந்த அம்சங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன.
'கட்-ஆப்' குறையும்

ஏ.ஐ.சி.டி.இ.,யின் சமீபத்திய அறிவிப்பின்படி, உரிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக்கொள்ளும் சலுகையை வழங்கி உள்ளது. அதனால், பல முன்னணி கல்வி நிறுவனங்கள் அவர்களது சேர்க்கை இடங்களை அதிகரித்து கொள்ளும். ஆகையால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 'கட்-ஆப்' குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
இன்ஜினியரிங் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கணிதத் திறன் மற்றும் துறை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பிரிவுகளில் அதிகளவில் 'புராஜெக்ட்' செய்தல், இன்டர்ன்ஷிப் பயிற்சிகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
-ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னலாஜி, சென்னை.
info@citchennai.net044-71119111






      Dinamalar
      Follow us