UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:31 AM
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நாகர்கோவில் உள்ள திருமண வீட்டிற்கு நேற்று முன்தினம்(மே 5) வந்தனர். அதில் 12 பேர் நேற்று காலை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து ராஜாக்கமங்கலம் லெமூர் பீச்சுக்கு காலை 9:30 மணியளவில் வந்தனர்.
இதில் சிலர் கடலில் கால் நனைத்தபடி கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த ராட்சத அலை 6 பேரை இழுத்தது. இதில் ஒரு மாணவி உயிர் தப்பிய நிலையில் மூன்று மாணவிகள் இரண்டு மாணவர்கள் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.