UPDATED : பிப் 22, 2026 11:25 AM
ADDED : பிப் 22, 2026 11:27 AM
செங்கல்பட்டு:
பல்லாவரத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 658 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நேற்று பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில், 3,306 பேரும், மாற்றுத்திறனாளிகள் 31 பேரும், வேலைவாய்ப்பு கோரி மனு அளித்தனர். இதில், 651 பேரும், மாற்றுத்திறனாளிகள் ஏழு பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 242 வேலைநாடுநர்களுக்கு, பணி நியமன ஆணையை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், இணை இயக்குநர் வேலைவாய்ப்பு தேவேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
