UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 03:24 AM
அ நிறம் | அளவு
பழநி அருகே சிவகிரிபட்டி ஊராட்சி தட்டாங்குளம் பகுதியில் முருகன் கோயிலுக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் சித்த மருத்துவக் கல்லுாரி அமைக்க ஒதுக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி அமைக்க சில ஆண்டுகள் சித்த மருத்துவமனை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகமும் சித்த மருத்துவமனை அமைக்க அனுமதியளித்தது. அதன்படி பழநி ஆர்.ஏப்.ரோடு வேலவன் விடுதி வளாகத்தில் தற்காலிகமாக சித்த மருத்துவமனை துவங்கப்பட்டு செயல்படுகிறது. இதற்கிடையே சித்த மருத்துவகல்லுாரி கட்டுமானங்களை துவங்க மத்திய அரசின் பங்கீடாக ஆயுஷ் அமைச்சகம் சார்பில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
